புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 1 Dec 2022 12:15 AM IST (Updated: 1 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

தார்சாலை வேண்டும்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நடுவலசை-வலகைக்காடு செல்ல சாலைவசதி இல்லாமல் மண்ரோடாக காட்சியளிக்கிறது. இதனால் மழை பெய்தால் சாலையானது வெள்ளக்காடாக மாறி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள், வாகனஓட்டிகள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மண்ரோட்டை தார்சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க

நவநீதன், இளையான்குடி.

குப்பைத்தொட்டி தேவை

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தினசரி சந்தை காய்கறி குப்பை சூழ்ந்து காணப்படுகிறது. இப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள், வியாபாரிகள் துர்நாற்றத்தால் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு தேங்கியுள்ள குப்பைகளை அள்ளுவதோடு குப்பைத்தொட்டி அமைத்து தினசரி அதனை அப்புறப்படுத்த வேண்டும்.

அஷ்வின், தேவகோட்டை.

குடிநீர் தட்டுப்பாடு

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே சியாமுத்துபட்டியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழுதடைந்ததால் கடந்த சிலநாட்களாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் தள்ளுவண்டியில் பலகிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்துவருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி நீர்தேக்க தொட்டியை சீரமைத்து நீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.

ஜோஸ்வா, சிங்கம்புணரி.

பயனற்ற சாலை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி சாலைகள் பல சேதமடைந்து போக்குவரத்திற்கு பயனற்ற நிலையில் மோசமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகனங்கள் சிறு, சிறு விபத்திகளில் சிக்கி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போக்குவரத்திற்கு ஏதுவான வகையில் சாலையை சீரமைக்க வேண்டும்.

மணிகண்டன், திருப்புவனம்.

வறண்ட கண்மாய்

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உலகமணியேந்தல் கண்மாய் நீரின்றி வறண்ட நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நீரின்றி தவிக்கிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த கண்மாய் நிரம்பும் வண்ணம் நீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், உலகமணியேந்தல்.


Next Story