தினத்தந்தி புகார்பெட்டி
புகார்பெட்டி
செய்தி எதிரொலி
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி அரசஊருணியில் பூங்கா மற்றும் நடைமேடை அமைக்கும்படி தினத்தந்தி புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் எதிரொலியாக பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காதர் மீரா, ஆர்.எஸ்.மங்கலம்.
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே முகில்தகம் பெரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமயானம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் சடங்குகள் செய்ய சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி பொதுமயான ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சந்திரன், முகில்தகம்.
சுற்றித்திரியும் கால்நடைகள்
ராமநாதபுரம் நகரில் பல பகுதி சாலைகளில் கால்நடைகள் அதிகளவில் சுற்றி திரிகின்றன. இவற்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் சிறு, சிறு விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மேலும் சாலையில் செல்லும் பாதசாரிகளை இவை முட்டி அச்சுறுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.
அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.
இரவு ரோந்து தேவை
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இரவு நேரங்களில் சிலர் பள்ளி வளாகத்தில் அத்துமீறி உள்ளே நுழைந்து சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால் இப்பகுதி பொதுமக்கள் இரவுநேரத்தில் வெளியே வர அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இரவு ரோந்து பணியை இப்பகுதியில் அதிகரித்து குற்றச்செயல்கள் நடக்காத வண்ணம் தடுக்க வேண்டும். ஜலாலுதீன், பெரியபட்டினம்.
கண்மாயில் கழிவுநீர்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே மேலமானாங்கரை கிராமத்தில் உள்ள கண்மாயில் கழிவுநீர் கலக்கிறது. மேலும் கருவேலமரங்கள் போன்றவற்றால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த நீரை பயன்படுத்தும் பொதுமக்கள் நோய் பரவல் காரணமாக சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி கண்மாயை தூர்வாரி கழிவுநீர் கலக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜ்குமார், முதுகுளத்தூர்.