புகார்பெட்டி


புகார்பெட்டி
x
தினத்தந்தி 2 Jan 2023 12:15 AM IST (Updated: 2 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?

சிவகங்கை மாவட்டம் கட்டணிபட்டி கிராமத்தில் காளி அம்மன் மற்றும் சின்ன சந்திவீரன் கோவில் அருகில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் இப்பகுதி பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுகின்றது. எனவே இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி குற்றங்களை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சண்முகநாதன், சிவகங்கை.

பழுதடைந்த எந்திரம்

சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரம் வைத்து மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த எந்திரம் அடிக்கடி பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளங்கோ, சிவகங்கை.

சாலை சீரமைக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் ஊராட்சி வைகைவடகரை பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் உள்ள தெருவின் சாலை குன்டும் குழியுமாக சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சாலையை சரிசெய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கார்த்திகேயன், திருப்புவனம்.

நடவடிக்கை தேவை

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அம்பேத்கர் நகர் பகுதியில் சாக்கடை கால்வாய் வசதி இல்லாத காரணத்தால் சாலையில் கழிவுநீர் தேங்கி சாலை சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் அருகில் குடியிருப்பு இருப்பதால் நோய் தொற்று பரவும் அபாய நிலையும் உள்ளது. எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முரளி, சிங்கம்புணரி.

சுகாதார சீர்கேடு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைத்தியலிங்கபுரம் திருவள்ளுவர் 2-வது சந்து பகுதியில் பொதுகழிப்பறை வசதி இல்லை. இதனால் இப்பகுதியில் சிலர் சுற்றுசூழலுக்கு கேடுவிளைவிக்கும் வகையில் திறந்த வெளியில் அசுத்தம் செய்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இப்பகுதியில் பொதுகழிப்பறை அமைத்து தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், காரைக்குடி.


Next Story