தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து சிவகங்கைக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் இந்த பகுதியில் உள்ளவர்கள் படியில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ் இயக்கிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், திருப்புவனம்.
விபத்து அபாயம்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் பழைய திருக்கோளக்குடியில் உள்ள தொடக்கப் பள்ளியின் முன்பு உள்ள மின்கம்பம் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்த நிலையில் சேதமடைந்து உள்ளது. இந்த மின்கம்பத்தால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூர்த்தி, திருப்பத்தூர்.
கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
சிவகங்கை மாவட்டம் கள்ளிப்பட்டு ஊராட்சி வெட்டிச்சி ஊருணி, சுக்கான் ஊருணியில் கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இதனால் ஊருணியில் தண்ணீர் சேமிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே மழை காலத்திற்கு முன்னர் இந்த ஊருணிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றி தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுவாமிநாதன், புரண்டி.
அடிப்படை வசதிகள் தேவை
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் கிளை நூலகத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் இடப்பற்றாக்குறையால் வாசகர்கள் அவதிப்படுகின்றனர். எனவே இந்த நூலகத்திற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆனந்தன், காளையார்கோவில்.
தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இதனால் இந்த பகுதியில் வாகனங்களில் செல்வோர் மிகவும் அவதிப்படுகின்றனர். மேலும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நாய்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கர், எஸ்.புதூர்.