புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 26 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ராமநாதபுரம்


அடிக்கடி ஏற்படும் மின்தடை

ராமநாதபுரம் நகரில் சமீப காலமாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இத்தகைய மின் துண்டிப்பு சுமார் அரை மணி நேரம் வரை நீடிக்கிறது. இதனால் பொதுமக்களின் அத்தியாவசிய வேலைகள் பாதிப்படையும் சூழல் நிலவுகிறது. எனவே தடையற்ற மின்வினியோகத்திற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

தாழ்வாக செல்லும் மின்வயர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் புளியமர பஸ் நிறுத்தம் அருகில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றது. இந்த வழியாக தினந்தோறும் ஏராளமான பள்ளி பஸ்கள், அரசு, தனியார் பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் அதிக அளவில் பயணிக்கின்றன. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனஓட்டிகள் ஒருவித தயக்கம் அடைகின்றனர். எனவே மின்துறை அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்வயர்களை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமசாமி, பாம்பன்.

ெபாதுமக்கள் அவதி

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. சில கிராமங்களில் வாரம் ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். ஆதலால் முறையான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ராமநாதபுரம்.

பஸ் வசதி வேண்டும்

ராமநாதபுரத்திலிருந்து பெரியபட்டினம் கிராமத்திற்கு 7 பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது திடீரென 2 பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. இயக்கப்படும் பஸ்களும் சரியான நேரத்திற்கு வருவதில்லை. மேலும் சென்னையிலிருந்து பெரியபட்டினத்திற்கு இயக்கப்பட்ட அதிவிரைவு பஸ்கள் கடந்த சில வருடங்களாக இயக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

சீனி ஜலாலுதீன், பெரியபட்டினம்.

நடவடிக்கை தேவை

ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள ஒரு சில இடங்களில் சாலையில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடக்கின்றன. தேங்கி கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே குப்பைகள் தேங்காமல் அவ்வப்போது அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், ராமநாதபுரம்.


Next Story