பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க புகார் பெட்டி
பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க புகார் பெட்டியை கலெக்டர் தொடங்கிவைத்தார்.
திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க அனைத்து அரசு அலுவலங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு புகார்பெட்டி அமைக்கும் பணியை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து ரத்தசோகை ஒழிப்பு தீவிர விழிப்புணர்வு முகாம் மற்றும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
அப்போது கலெக்டர் பேசுகையில் அனைத்து அரசு அலுவலங்களில் பணிபுரிகின்ற பெண்களுக்கு ரத்தசோகை பரிசோதனை செய்ய வேண்டும். தேசிய ஊட்டச்சத்து மாத விழா வருகிற 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்,
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, தனித்துனை கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயன், மாவட்ட சமூக நல அலுவலர் ஸ்டெல்லா, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சக்திசுபாஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.