வியாபாரிகள் ரொக்க தள்ளுபடி கேட்டால் புகார் தெரிவிக்கலாம்தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு அறிவிப்பு


வியாபாரிகள் ரொக்க தள்ளுபடி கேட்டால் புகார் தெரிவிக்கலாம்தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு அறிவிப்பு
x

வியாபாரிகள் ரொக்க தள்ளுபடி கேட்டால் புகார் தெரிவிக்கலாம் என தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல துணை தலைவர் சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் கடந்த 1-ந் தேதி முதல் மைனஸ் முறை ரத்து செய்யப்பட்டு, தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயம் செய்யும் விலைக்கே முட்டைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சில வியாபாரிகள் ரொக்க தள்ளுபடி என்று விவரம் புரியாத சில பண்ணையாளர்களிடம் வாங்குவதாக அறிகிறோம்.

வியாபாரிகள் மற்றும் பண்ணையாளர்களுக்கு மீண்டும் ஒரு முறை தெளிவுபடுத்த விரும்புகிறோம். அதாவது தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு அறிவிக்கும் விலை என்பது ரொக்கத்திற்கான விற்பனை தான். எனவே பண்ணையாளர்கள் ரொக்கத்திற்கு என்று தனியாக எதுவும் கழித்து கொடுக்க தேவையில்லை. அவ்வாறு ரொக்கத்திற்கு என்று தனியாக எந்த வியாபாரியாவது தள்ளுபடி கேட்டால், அது குறித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் வட்டார குழு தலைவர்களிடமோ, தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு அலுவலகத்திலோ, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்திலோ அல்லது முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனத்திலோ அலுவலக நேரத்தில் செல்போன் வாயிலாகவோ அல்லது நேரிலோ புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கப்படும் புகார் உரிய முறையில் அணுகப்பட்டு ரொக்கத்திற்கு என்று தனி தள்ளுபடி இல்லை என்பது அந்த வியாபாரிக்கு அறிவுறுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story