பழங்குடி இன பெண்ணை ஆந்திர போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார்


பழங்குடி இன பெண்ணை ஆந்திர போலீசார் பாலியல் வன்கொடுமை செய்ததாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார்
x

தனது கணவரை நிர்வாணப்படுத்தி உடல் முழுவதும் மிளகாய் பொடி தேய்த்து சித்ரவதை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

சென்னை,

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா புளியாண்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடி இன பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரை திருட்டு வழக்கு தொடர்பான விசாரணைக்காக ஆந்திர போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது போலீசார் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண், சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளார். அதில் போலீசார் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், தனது கணவரை நிர்வாணமாக்கி உடல் முழுவதும் மிளகாய் பொடி தேய்த்து சித்ரவதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


1 More update

Next Story