ஊராட்சி செயலாளர், சத்துணவு அமைப்பாளர் மீது அமைச்சரிடம் புகார்


ஊராட்சி செயலாளர், சத்துணவு அமைப்பாளர் மீது அமைச்சரிடம் புகார்
x

சின்னபரவத்தூர் கிராமமக்கள் அமைச்சர் காந்தியிடம், ஊராட்சி செயலாளர் மற்றும் சத்துணவு அமைப்பாளர் மீது புகார் மனு அளித்துள்ளனர். அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

ராணிப்பேட்டை

சின்னபரவத்தூர் கிராமமக்கள் அமைச்சர் காந்தியிடம், ஊராட்சி செயலாளர் மற்றும் சத்துணவு அமைப்பாளர் மீது புகார் மனு அளித்துள்ளனர். அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

சோளிங்கரில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்வழங்கும்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.காந்தி கலந்துகொண்டார். அவரிடம் சோளிங்கர் அடுத்த சின்னப்பரவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் 60-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

ஊராட்சி செயலாளர்

அந்த மனுவில் பரவத்தூர் ஊராட்சியில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர், ஊராட்சி பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் அனைத்தையும் அவரைச் சாரிந்த உறவினர்களுக்கு மட்டும் கொடுத்து வருகிறார். அரசு வழங்கும் தொகுப்பு வீடுகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்காமல், ஏற்கனவே வீடு பெற்றவர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கும் வழங்கி வருகிறார்.

இவரது உறவினரான பணித்தள பொறுப்பாளரின் உறவினர்கள் 30 பேருக்கு ஏரி வேலைக்கு அட்டைகளை பெற்றுக்கொண்டு வேலை செய்யாமல், பொய்யான கணக்கை காட்டி, பணத்தை பெற்றுக் கொள்கிறார்.

சத்துணவு அமைப்பாளர்

சின்னபரவத்தூர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் சத்துணவு திட்டத்தில் பலமுறைகேடுகள் செய்து வருதாகவும், இவரது உறவினர் வீட்டிலேயே சத்துணவு பொருட்களை வைத்துள்ளார். இவர்கள் இருவரும் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களை பணியிடைமாற்றம் செய்யுமாறும், இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கிராம பொதுமக்கள் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் பாஸ்கர பாண்டியனுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.


Next Story