பொது வினியோக திட்ட பொருட்கள் கடத்தல்-பதுக்கல் குறித்து புகார் தெரிவிக்கலாம்


பொது வினியோக திட்ட பொருட்கள் கடத்தல்-பதுக்கல் குறித்து புகார் தெரிவிக்கலாம்
x

பொது வினியோக திட்ட பொருட்கள் கடத்தல்-பதுக்கல் குறித்து புகார் தெரிவிக்கலாம் என்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

பொது வினியோக திட்ட பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் போன்றவற்றை கடத்துவதும், பதுக்குவதும் குற்றமாகும். இந்த குற்றத்தை செய்யும் நபர்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாத பண்டங்கள் சட்டம் 1980-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொது வினியோக திட்ட பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பான புகார்களை 1800895980 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வுத்துறை டி.ஜி.பி. வன்னிய பெருமாள் உத்தரவின்படி மாவட்ட சூப்பிரண்டு சுஜாதா தெரிவித்துள்ளார்.


Next Story