சென்னை புழல் அருகே குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்


சென்னை புழல் அருகே குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக புகார் - சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
x

சென்னை காவாங்கரை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை,

சென்னை புழல் அருகே குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாகவும், இது குறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவாங்கரை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை வல்லுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.



Next Story