தொடர் விடுமுறை நிறைவு; பஸ், ரெயில்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
தொடர் விடுமுறை நிறைவு; பஸ், ரெயில்களில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
ஈரோடு
ஆயுத பூஜை, விஜயதசமியையொட்டி அரசு விடுமுறை விடப்பட்டது. மேலும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளுடன் சேர்த்து மொத்தம் 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டு இருந்தது. தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் வெளியூர்களுக்கு சென்று திரும்பினர். இதனால் பஸ், ரெயில்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. விடுமுறை நிறைவையொட்டி நேற்று பஸ், ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
ஈரோட்டில் இருந்து வெளியூர் செல்லும் அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் பயணிகள் பலர் உட்கார இடம் கிடைக்காமல் நின்று கொண்டே பயணம் செய்தனர். இரவு நேரத்தில் பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் சிலர் அவதி அடைந்தனர். ஈரோட்டில் இருந்து கோவைக்கு சென்ற பஸ்களிலும் பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது.
Related Tags :
Next Story