மலைக்கோட்டாலம் அரசு பள்ளிக்கு கணினி

நடிகர் விஜய் பிறந்த நாள் விழாவையொட்டி மலைக்கோட்டாலம் அரசு பள்ளிக்கு விஜய் மக்கள் இயக்க விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளரும், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவருமான பரணி பாலாஜி கணினி வழங்கினார்.
நடிகர் விஜயின் 49-வது பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய தளபதி மக்கள் இயக்க பொதுசெயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஸ்ஸி ஆனந்து அறிவுறுத்தலின் படி கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை மற்றும் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட இளைஞரணி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கள்ளக்குறிச்சி மலைக்கோட்டாலம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கணினி மற்றும் மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் பிரகாஷ் தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் சிலம்பரசன் முன்னிலை வகித்தார். தெற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை தலைவர் முருகன் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளரும், கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவருமான பரணி பாலாஜி கலந்து கொண்டு பள்ளிக்கு கணினி வழங்கினார்.
அன்னதானம்
தொடர்ந்து 49 கிலோ எடை கொண்ட கேக் வெட்டி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் 300 பேருக்கு அன்னதானம் வழங்கினார். தொடர்ந்து அப்பகுதியில் விஜய் மக்கள் இயக்க பெயர் பலகையை திறந்து வைத்தார். இதில் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை தலைவர் வரதராஜ், ஒன்றிய தலைவர் தீலிப்குமார், தெற்கு ஒன்றிய இளைஞர் அணி தலைவர் சின்னதுரை, தெற்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அரவிந்த், வடக்கு ஒன்றிய இளைஞர் அணி தலைவர் ஸ்டாலின், கள்ளக்குறிச்சி நகர இளைஞர் அணி தலைவர் கார்த்திக், வடக்கு ஒன்றிய இளைஞர் அணி பொருளாளர் சுந்தர்ராஜ் , வடக்கு ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ராஜா, தெற்கு ஒன்றிய இளைஞர் அணி பொருளாளர் மணி, பிரான்சிஸ்,வடக்கனந்தல் ரமேஷ் மற்றும் மலைக்கோட்டாலம் கிளை தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.






