தனியார் கல்லூரியில் கணினிகள் திருட்டு


தனியார் கல்லூரியில் கணினிகள் திருட்டு
x
தினத்தந்தி 4 Dec 2022 6:45 PM GMT (Updated: 4 Dec 2022 6:48 PM GMT)

மயிலம் அருகே தனியார் கல்லூரியில் கணினிகளை திருடிய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

மயிலம்,

மயிலம் அடுத்த கொல்லியங்குணம் கிராமத்தில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் கடந்த 2-ந்தேதி மாலையில் வேலை முடிந்ததும் வழக்கம்போல் கணினி அறையை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனா். பின்னர் நேற்று முன்தினம் திரும்பி வந்து பார்த்தபோது, கணினி அறை கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. மேலும் அங்கிருந்த 5 கணினிகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த தகவலின் பேரில் மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் கணினி அறைக்குள் புகுந்து அங்கிருந்த கணினிகளை திருடிச்சென்றது தெரிந்தது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story