நன்றியறிதல் விழா நிறைவு: புதூர் புனித லூர்து அன்னை ஆலய தேர்பவனி


நன்றியறிதல் விழா நிறைவு: புதூர் புனித லூர்து அன்னை ஆலய தேர்பவனி
x

நன்றியறிதல் விழா நிறைவு நாளில் புதூர் புனித லூர்து அன்னை ஆலய தேர்பவனி நடைபெற்றது.

மதுரை


மதுரை கோ.புதூர் புனித லூர்து அன்னை திருத்தலம், 100 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. கடவுள் செய்த நன்மைக்காக நன்றியறிதல் விழா கடந்த 2 வாரங்களாக நடைபெற்றது. இதனை திருச்சி சலேசிய சபையின் மாநில தலைவர் அருட்தந்தை அகிலன் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்தார். பின்னர் 'தலைமுறை தலைமுறையாய்' என்ற தலைப்பில் மரியன்னை பற்றி மறையுரை ஆற்றி, கூட்டு திருப்பலி நிறைவேற்றினார். இதனைத் தொடர்ந்து தினமும் பல்வேறு தலைப்புகளில் பங்கு தந்தைகள், மறையுரை சிந்தனை நடந்தது. இது போல் 1-ந்தேதி மற்றம் 8-ந் தேதிகளில் "பொன்மயமான ஆலயமே" என்ற தலைப்பில் மறையுரை நிகழ்த்தி, பொங்கல் விழா நடந்தது. விழாவின் நிறைவாக, நேற்று மதுரை உயர் மாவட்ட பேராயர் அந்தோணி பாப்பு சாமி தலைமையில் கூட்டுத்திருப்பலி நடத்தப்பட்டு, அன்னையின் நாள் கொண்டாடப்பட்டது. பங்குத்தந்தை ஜார்ஜ் முன்னிலை வகித்தார். விழாவில் அருட்தந்தையர்கள் மற்றும் இறை மக்கள் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து லூர்து அன்னையின் சப்பரம் பவனியாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த தேர்பவனி, மாதா கோவில் தெரு, அபிநயா ரோடு, அழகர்கோவில் ரோடு வழியாக கோவிலை வந்தடைந்தது. இதில் மதுரையின் அனைத்து பங்குகளிலும் இருந்து மக்கள் பெருமளவில் கலந்து கொண்டு அன்னையின் ஆசி பெற்று சென்றனர்.

1 More update

Next Story