மின் கட்டண உயர்வை கண்டித்து கப்பலூர் சிட்கோவில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்


மின் கட்டண உயர்வை கண்டித்து கப்பலூர் சிட்கோவில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
x

மின்கட்டண உயர்வை கண்டித்து கப்பலூர் சிட்கோவில் தொழிலாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை

திருமங்கலம்,

மின்கட்டண உயர்வை கண்டித்து கப்பலூர் சிட்கோவில் தொழிலாளா்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மின்கட்டண உயர்வு

பொருளாதார மந்த நிலை, மூலப்பொருட்களின் விலை உயர்வு, பணியாளர்களின் பற்றாக்குறை மற்றும் பல இன்னல்களை தொழில்துறை சந்தித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த வருடம் தமிழக அரசால் உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. மேலும் மின் கட்டணம் உயர்த்தப்படுவதால் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில்களை நிரந்தரமாக முடக்கிவிடும் அபாயம் உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் துறை நுகர்வோர் கூட்டமைப்புடன் தென் மாவட்டங்களை உள்ளடக்கிய மின் நுகர்வோர் கூட்டமைப்பும் இணைந்து இன்று 200-க்கும் மேற்பட்ட சங்கங்கள் கதவடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.

வேலை நிறுத்தம்

அதன் அடிப்படையில் இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இரண்டாவது பெரிய தொழிற்பேட்டையான கப்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் 600-க்கும் மேற்பட்ட தொழிற்கூடங்கள் உள்ளன. இந்தக் கப்பலூர் தொழிற்பேட்டையில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் மின் கட்டண உயர்வை கண்டித்து இன்று கதவடைப்பு மற்றும் வேலை நிறுத்த போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழில் கூடங்கள் ஈடுபட்டு வருகின்றன. இதனால் தொழில்கள் முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பழங்காநத்தத்தில் மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என கப்பலூர் தொழிற்பேட்டை தொழிலதிபர் சங்க தலைவர் ரகுநாத ராஜா தெரிவித்தார்.


Next Story