மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துகோத்தகிரியில், கிறிஸ்தவ திருச்சபையினர் அமைதி ஊர்வலம்


மணிப்பூர் சம்பவத்தை கண்டித்துகோத்தகிரியில், கிறிஸ்தவ திருச்சபையினர் அமைதி ஊர்வலம்
x

பிரார்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவர்கள். 

தினத்தந்தி 21 Aug 2023 12:15 AM IST (Updated: 21 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோத்தகிரியில், கிறிஸ்தவ திருச்சபையினர் அமைதி ஊர்வலம் நடத்தினர்.

நீலகிரி

கோத்தகிரி: மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறையை கண்டித்தும், மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகள் அங்கு அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கபட்டவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஒருங்கிணைந்த கிறிஸ்தவ திருச்சபைகள் ஐக்கியம் சார்பில் நேற்று மாலை கோத்தகிரி காமராஜர் சதுக்கம் அருகே உள்ள புனித லூக்கா ஆலயத்தில் இருந்து அமைதி ஊர்வலம் நடத்தப்பட்டது. முன்னதாக இந்த ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

இதனால் அவர்களை ஊர்வலம் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அவர்கள் குழு, குழுவாக பிரிந்தபடி ஊர்வலமாக சென்று கோத்தகிரி மார்க்கெட் திடலில் ஒன்று திரண்டனர். இந்த ஊர்வலத்தில் பெந்தெகோஸ்தே, ஆர்.சி., சி.எஸ்.ஐ., டி.இ.எல்.சி. உள்பட அனைத்து திருச்சபைகளை சேர்ந்த நிர்வாகிகள், கிறிஸ்தவ மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இதில் அவர்கள், மணிப்பூருக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர். மேலும் மணிப்பூர் மாநிலத்தில் அமைதி நிலவவும், கலவரத்தில் உயிரிழந்தவர்களுக்காகவும் பிரார்த்தனை செய்தனர்.


Next Story