மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 July 2023 11:37 PM IST (Updated: 12 July 2023 5:33 PM IST)
t-max-icont-min-icon

மணிப்பூர் கலவரத்தை கண்டித்து கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், பொது அமைதி ஏற்படுத்திட வலியுறுத்தியும் திருவண்ணாமலை அண்ணாசிலை அருகில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட அனைத்து கிறிஸ்துவ மக்கள் கூட்டமைப்பு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதனையொட்டி திருவண்ணாமலை திண்டிவனம் சாலை உள்ள உலக மாதா ஆலய வளாகத்திலிருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டு அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு திருவண்ணாமலை மறைகோட்ட அதிபர் ஞானஜோதி தலைமை தாங்கினார். சுயாதீனத் திருச்சபைகளின் பேராயர் பன்னீர்செல்வம், ஆற்காடு லூத்தரன் திருச்சபை பேராயர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜான்ஜோசப் வரவேற்றார். இதில் மாவட்ட கிறித்துவ மகளிர் உதவி சங்கங்களின் கவுரவ செயலாளர் மூத்த வழக்கறிஞர் ஆர்.எல்.ராசாரியோ, தீண்டாமை ஒழிப்பு முன்னணியை சேர்ந்த செல்வம், மக்கள் அதிகார மேடை அமைப்பை சேர்ந்த ராமதாஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த வீரபத்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தெற்கு மாவட்ட செயலாளர் அம்பேத்வளவன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார். ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டனர்.

முடிவில் திருவண்ணாமலை மறைக்கோட்ட துறவியர் பேரவை தலைவர் பீட்டர் ஜூலியன் நன்றி கூறினார்.


Next Story