நாங்குநேரி சம்பவத்தை கண்டித்துதீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


நாங்குநேரி சம்பவத்தை கண்டித்துதீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Aug 2023 12:15 AM IST (Updated: 17 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து தூத்துக்குடியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் நேற்று நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் காசி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நாங்குநேரி அருகே பள்ளி மாணவர்கள் மீது நடந்த தாக்குதலை கண்டித்தும், தூத்துக்குடியில் காருக்கு வழிவிடாமல் சென்றதாக கூறி சகோதரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் சக்திவேல் முருகன், மாவட்ட துணைத் செயலாளர் நாகராஜ், முத்து, கார்த்தி, சுரேஷ், மாவட்ட துணைத் தலைவர் தர்மர், மாவட்டக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் புவி ராஜ், சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் ரசல், மாவட்ட தலைவர் பேச்சி முத்து, மாவட்ட பொருளாளர் அப்பா துரை, இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் கிஷோர், வாலிபர் சங்க மாவட்ட பொருளாளர் மனோஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சங்கரன், புறநகர் செயலாளர் ராஜா, ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலாளர் நம்பி ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story