மன்னர் கல்லூரியில் கருத்தரங்கம்


மன்னர் கல்லூரியில் கருத்தரங்கம்
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:45 PM GMT)

பசுமலையில் உள்ள மன்னர் கல்லூரியில் முன்னோட்ட மாநாடு நடைபெற்றது.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் உள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் வணிகவியல் கணினி பயன்பாட்டுத்துறை சார்பில் ஆட்சியின் புதிய முன்னுதாரணங்கள் என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப்பிரிவு இயக்குனர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஐ.ஐ.பி.ஏ. துணை சேர்மன் ஞானபிரபாகரன் வைஸ் வரவேற்றார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக. ஐ.ஐ.பி.ஏ.செயலாளர் பாஸ்கரன், காந்தி கிராம உதவி பேராசிரியர் சவுந்தர பாண்டியன், அமெரிக்கன் கல்லூரி இணை பேராசிரியர் முத்துராஜா ஆகியோர் கலந்துகொண்டு நல்லாட்சி குறித்து பேசினார்கள்.விழாவினை வணிகவியல் கணினி பயன்பாட்டுத்துறைத் தலைவர் நாகசுவாதி ஏற்பாடு செய்தார். உதவி பேராசிரியர்கள் இளம் பிறை, சண்முகப்பிரியா, தேன்மொழி ஆகியோர் விழாவினை ஒருங் கிணைத் தனர்.


Related Tags :
Next Story