ஊட்டச்சத்து விழா கருத்தரங்கு


ஊட்டச்சத்து  விழா கருத்தரங்கு
x

ஊட்டச்சத்து விழா கருத்தரங்கு

திருப்பூர்

திருப்பூர்,

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 மற்றும் தமிழ்நாடு உணவுத்துறை இணைந்து தேசிய ஊட்டச்சத்து வாரத்தின் நிறைவுவிழா கருத்தரங்கு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

உணவு பாதுகாப்பு அலுவலர் தங்கவேல் பங்கேற்று, 'சத்துணவே ஆரோக்கியத்துக்கு மூலமாகும். கம்பு, கேழ்வரகு, தினை போன்ற சிறுதானியங்களை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். கடைகளில் பொருட்களை வாங்கும்போது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்டவற்றை கவனித்து வாங்க வேண்டும். சாயம் கலந்த உணவுப்பொருட்களை தவிர்க்க வேண்டும். உணவுப்பொருட்களில் கலப்படம் குறித்த புகாருக்கு 94440 42322 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.


Next Story