கர்நாடகாவில் இருந்து காரிமங்கலம் வழியாக காரில் கடத்திய ரூ.2.65 லட்சம் குட்கா பறிமுதல்டயர் பஞ்சரானதால் டிரைவர் தப்பி ஓட்டம்
காரிமங்கலம்:
கர்நாடகாவில் இருந்து காரிமங்கலம் வழியாக குட்கா கடத்தி வந்தபோது காரிமங்கலம் அருகே டயர் பஞ்சரானதால் டிரைவர் தப்பி ஓடி விட்டார். காரில் இருந்த ரூ.2.65 லட்சம் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீசார் ரோந்து
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் நேற்று காலை செல்லமாரம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு கார் ஒன்று நீண்ட நேரமாக சாலையோரம் நின்று இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரில் சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டை மூட்டையாக இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். கர்நாடகாவில் இருந்து குட்கா கடத்தி வந்த போது டயர் பஞ்சரானதால் டிரைவர் மற்றும் அதில் வந்தவர்கள் காரை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டது தெரியவந்தது.
விசாரணை
இதையடுத்து போலீசார் கார் மற்றும் மூட்டைகளில் இருந்த ரூ.2.65 லட்சம் மதிப்பிலான குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.