காரில் கடத்த முயன்ற குட்கா, மதுபாட்டில்கள் பறிமுதல்


காரில் கடத்த முயன்ற குட்கா, மதுபாட்டில்கள் பறிமுதல்
x

பெங்களூருவில் இருந்து ஆரணிக்கு காரில் கடத்த முயன்ற குட்கா, மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக கார் டிரைவர் கைது செய்யப்பட்டார். மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

வாகன சோதனை

ஓசூர் டவுன் போலீசார் தளி சாலையில், ரெயில்வே கேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்புள்ள 142 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான்மசாலா மற்றும் ரூ.2,400 மதிப்புள்ள மதுபாட்டில்கள் காரில் இருந்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா காமத்தூர் பாளையத்தை சேர்ந்த டிரைவர் ஆதவன் (வயது 25) என்பதும் தெரிந்தது. இவர் பெங்களூருவில் இருந்துஆரணிக்கு குட்கா மற்றும் மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

பறிமுதல்

இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து குட்கா, மதுபாட்டில்கள், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் தொடர்பாக வந்தவாசியை சேர்ந்த தாமோதரன், ராஜி, ஹரி, சரத், ஆரணி சூர்யா, சஞ்சய் ஆகிய 6 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.


Next Story