புதரில் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்


புதரில் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
x

பாலக்கோடு அருகே புதரில் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தர்மபுரி

பாலக்கோடு

பாலக்கோட்டை அடுத்த பொரத்தூரில் முட்புதரில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக பி.செட்டிஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் மாதேஷ் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பாலக்கோடு போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது முட்புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தவர் யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story