1¼ கிலோ கஞ்சா பறிமுதல்;வாலிபர் கைது
திருத்துறைப்பூண்டியில் 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வாலிபர் ஒருவரை கைது செய்து உள்ளனர்.
திருவாரூர்
கோட்டூர்:
திருத்துறைப்பூண்டியில் 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இது தொடர்பாக வாலிபர் ஒருவரை கைது செய்து உள்ளனர்.
கஞ்சா விற்பனை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சிங்காரவடிவேலு மற்றும் போலீசார் அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கைது
அப்போது பைபாஸ் ரோடு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அபிஷேக கட்டளையை சேர்ந்த குருமாறன் (வயது 23) என்பதும், அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 1¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story