2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

2½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொற்பனைக்கோட்டை அருகே சரக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தி செல்லப்பட்டதை கண்டு மடக்கி பிடித்தனர். மேலும் சரக்கு வேன் டிரைவரான அறந்தாங்கியை சேர்ந்த வெள்ளைச்சாமி (வயது 26), அரிசியை கடத்தி சென்ற ஆலங்குடியை சேர்ந்த கலைவாணன் (65) ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2½ டன் ரேஷன் அரிசியை சரக்கு வேனுடன் பறிமுதல் செய்தனர்.


Next Story