20 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்


20 மூடை ரேஷன் அரிசி பறிமுதல்
x

20 மூைட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

விருதுநகர்


விருதுநகர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விருதுநகர் அருகே அப்பையநாயக்கன்பட்டி- இருக்கன்குடி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் தலா 40 கிலோ கொண்ட 20 மூடை ரேஷன்அரிசி இருந்தது. வேனுடன் ரேஷன் அரிசி மூடைகளை பறிமுதல் செய்த போலீசார் வேனில் இருந்த விருதுநகர் ரோசல்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த விக்னேஷ் (வயது 29), வல்லரசு (28) ஆகிய 2 பேரையும் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story