மாட்டு வண்டி பறிமுதல்


மாட்டு வண்டி பறிமுதல்
x

மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டுக்கல்

தேவதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார், காமாட்சி அம்மன் கோவில் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது பெரியகுளத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 47) என்பவர் தனது மாட்டு வண்டியில் ஆற்று மணல் அள்ளி கொண்டு வந்தார். போலீசாரை கண்டதும் அவர் மாட்டு வண்டியை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேசை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story