மணல் அள்ளப்பட்ட மாட்டு வண்டி பறிமுதல்


மணல் அள்ளப்பட்ட மாட்டு வண்டி பறிமுதல்
x

மணல் அள்ளப்பட்ட மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே மழவராயநல்லூர் மருதையாற்று படுகை பகுதிகளில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசனுக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மருதையாற்றின் உள்ளே மாட்டு வண்டியில் மணல் அள்ளிக்கொண்டிருந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்ய முயன்றனர். ஆனால் அவர் போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அங்கிருந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகிறார்கள்.


Next Story