வேனில் கடத்த முயன்ற ரூ.8 லட்சம் குட்கா பறிமுதல்

வேனில் கடத்த முயன்ற ரூ.8 லட்சம் குட்கா பறிமுதல்
x

ஓசூர் வழியாக சேலத்திற்கு வேனில் கடத்த முயன்ற ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி

மத்திகிரி:

ஓசூர் வழியாக சேலத்திற்கு வேனில் கடத்த முயன்ற ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

வாகன சோதனை

ஓசூர் தாலுகா மத்திகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் பூனப்பள்ளி சோதனைச்சாவடி அருகில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் வேனில் 62 பைகளில் மொத்தம் 1,639 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், பான்மசாலா ஆகியவை இருந்தது. அதன் மதிப்பு ரூ.8 லட்சத்து 4 ஆயிரம் ஆகும். இதையடுத்து குட்கா மற்றும் சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

டிரைவர் கைது

குட்கா கடத்தல் தொடர்பாக போலீசார், வேன் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள ஜோடுகுழியை சேர்ந்த மணி (வயது 29) என்பதும, பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story