பஸ்சில் கடத்தி வந்த 67 கிலோ குட்கா பறிமுதல்


பஸ்சில் கடத்தி வந்த 67 கிலோ குட்கா பறிமுதல்
x

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு பஸ்சில் கடத்தி வந்த 67 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி டவுன் போலீசார் புதிய பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது ஓசூரில் இருந்து பழனி செல்வதற்காக அரசு பஸ் ஒன்று பஸ் நிலையத்திற்கு வந்தது. அந்த பஸ்சில் போலீசார் சோதனை செய்தனர். அதில் பை ஒன்று கேட்பாரற்று இருந்தது. போலீசார் அந்த பையை சோதனை செய்தபோது 67 கிலோ தடை செய்யப்பட்ட ஹான்ஸ், பான்மசாலா, குட்கா ஆகியவை இருந்தது. அதன் மதிப்பு ரூ.54 ஆயிரம் ஆகும். தொடர்ந்து போலீசார் குட்காவை பறிமுதல் செய்தனர். பஸ்சில் குட்கா கடத்தி வந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story