மதுபாட்டில்கள் பறிமுதல்
ஸ்ரீவில்லிபுத்தூரில் 412 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர்,
காந்தி ஜெயந்தியையொட்டி தமிழகம் முழுவதும் மதுபானக்கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இந்தநிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலைய உட்கோட்ட பகுதிகளில் அனுமதியின்றி மது விற்பனை நடைபெறுகிறதா என போலீசார் சோதனை நடத்தினர். அப்ேபாது ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் விடுதி, ஆத்துகடைதெரு, மேலத்தொட்டியபட்டி, கம்மாபட்டி, நாச்சியார்பட்டி ரோடு, வன்னியம்பட்டி, மம்சாபுரம், காந்திநகர், ராஜபாளையம் மெயின் ரோடு, வத்திராயிருப்பு ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 412 மது பாட்டில்களை அந்தந்த பகுதி போலீசார் பறிமுதல் செய்தனர். அத்துடன் இதுதொடர்பாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story