ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 28 Jun 2023 11:18 PM IST (Updated: 29 Jun 2023 4:16 PM IST)
t-max-icont-min-icon

ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது

ராணிப்பேட்டை

குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு வடக்கு மண்டல போலீஸ் சூப்பிரண்டு கீதா அறிவுறுத்தலின் பேரில், வேலூர் சரக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு நந்தகுமார் உத்தரவின் பேரில் ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் முருகன் மற்றும் போலீசார் சந்திரன், அருள், விருமாண்டி ஆகியோர் ரேஷன் அரிசி பதுக்குதல் மற்றும் கடத்தல் குறித்து அரக்கோணம் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில் அரக்கோணம் அடுத்த இச்சிபுத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த நபர் போலீசார் வருவதை கண்டு அங்கிருந்து தப்பிக்க முயன்றார். அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அதே பகுதியை சேர்ந்த பாண்டி (41) என்பதும், அரக்கோணம், இச்சிபுத்தூர், தணிகைபோளூர் ஆகிய பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி, அதனை இட்லி மாவாக அரைத்து அரக்கோணம் பகுதிகளில் உள்ள மளிகை கடை மற்றும் ஓட்டல்களில் அதிக விலைக்கு விற்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து வீட்டில் இருந்த 50 கிலோ எடை கொண்ட 20 மூட்டைகளில் சுமார் 1,000 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, அரக்கோணம் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் ஒப்படைத்தனர். ராணிப்பேட்டை குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை போலீசார் பாண்டி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Next Story