கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவுக்குவேனில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்டிரைவர் உள்பட 2 பேர் கைது


கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவுக்குவேனில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்டிரைவர் உள்பட 2 பேர் கைது
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவிற்கு வேனில் கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி, வேனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

கிருஷ்ணகிரி அடுத்த சீலேப்பள்ளியில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்கு பின் முரனாக பதில் கூறினார்.

இதையடுத்து போலீசார் வேனில் சோதனை செய்தனர். அதில் 50 கிலோ அளவிலான, 30 மூட்டைகளில் 1½ டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் மற்றும் உடன் வந்தவரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் வேப்பனப்பள்ளி ரமேஷ் (38) மற்றும் அருண் (23) என்பது ெதரியவந்தது.

கைது-பறிமுதல்

இவர்கள் பூசாரிப்பட்டி, காட்டிநாயனப்பள்ளி பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகத்தில் அதிக விலைக்கு விற்க கடத்த முயன்றது தெரிந்தது. இதையடுத்து போலீசார் டிரைவர் உள்பட 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து சரக்கு வேன் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இந்த ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story