வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; அரவை மில் உரிமையாளர் கைது


வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; அரவை மில் உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 28 Feb 2023 2:00 AM IST (Updated: 28 Feb 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் வீட்டில் 1 டன் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த அரவை மில் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் நாகல்நகர் பகுதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சவுராஷ்டிராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் அறையில் மூட்டை, மூட்டையாக 1 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த வீட்டில் இருந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் அதே பகுதியை சேர்ந்த ஆனந்தன் (வயது 52) என்பதும், நாகல்நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை சேகரித்து அவருக்கு சொந்தமான அரவை மில்லில் அரைத்து விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்தனர்.


Next Story