வீட்டில் பதுக்கிய 45 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்


வீட்டில் பதுக்கிய 45 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Jun 2023 6:45 PM GMT (Updated: 8 Jun 2023 6:46 PM GMT)

வீட்டில் பதுக்கிய 45 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் வனச்சரகர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவிபட்டினம் கடற்கரை பகுதியில் ஒரு வீட்டில் கடல் அட்டை வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து மாரியம்மன்கோவில் தெருவில் அயூப்கான் (வயது 53) என்பவரின் வீட்டில் சோதனையிட்டனர் அங்கு பதப்படுத்தப்பட்ட 45 கிலோ கடல் அட்டைகள் இருந்தது தெரிந்தது. அந்த கடல் அட்டைகளையும், பதப்படுத்த பயன்படுத்திய சிலிண்டர் உள்ளிட்ட பொருட்களையும் கைப்பற்றிய வனத்துறையினர் அயூப்கானை கைது செய்தனர். அரசால் தடைவிதிக்கப்பட்டுள்ள கடல்அட்டையை பிடிப்பதும், அதனை விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றம் என்றும், அதைமீறி இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறைதண்டனை விதிக்கப்படும் என்றும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.


Next Story