தியாகதுருகம் அருகே இருதரப்பினரிடையே மோதல்; 7 பேர் மீது வழக்கு


தியாகதுருகம் அருகே       இருதரப்பினரிடையே மோதல்; 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:45 PM GMT)

தியாகதுருகம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே விருகாவூர் ஜே.ஜே. நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் லட்சுமணன் (வயது 36). முடி திருத்தும் தொழிலாளியான இவர் உள்பட 7 பேர் அதே ஊரில் உள்ள அய்யனார் கோவில் திருவிழாவின் போது, பக்தர்களுக்கு மொட்டை அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்காக கிராம மக்கள் சார்பில் பணம் வழங்கப்பட்டது. இந்த பணத்தை பிரித்துக் கொள்வதில் லட்சுமணனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சந்தோஷ் (28) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ஒருவரையொருவர் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனித்தனி புகார்களின் பேரில் இருதரப்பை சேர்ந்த மாரிமுத்து, அவரது மனைவி சாந்தி, மகன்கள் சந்தோஷ், சதீஷ் மற்றும் லட்சுமணன், அவரது மனைவி அனுசுயா, கார்த்திக் ஆகிய 7 பேர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story