இருதரப்பினரிடையே மோதல்; கிராம மக்கள் சாலை மறியல்
இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதையடுத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி
வையம்பட்டி:
மணப்பாறையை அடுத்த சுண்டக்காம்பட்டி அருகே உள்ள களத்துப்பட்டியில் கோவில் கட்ட மக்கள் முடிவு செய்து, நேற்று பிடி மண் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரு தரப்பை சேர்ந்தவர் மண் எடுக்க வந்த மற்றொரு தரப்பை சேர்ந்தவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த 3 பேரும் மற்றொரு தரப்பை சேர்ந்த ஒருவரும் என 4 பேர் காயமடைந்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர். இந்நிலையில் தங்கள் தரப்பை சேர்ந்தவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி களத்துப்பட்டி கிராம மக்கள் மணப்பாறை - அமையபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கலைந்து போக செய்தனர்.
Related Tags :
Next Story