ஒரே பெண்ணை விரும்பியதால் பிரச்சினை காதல் தகராறில் மோதல்; 3 பேர் கைது


ஒரே பெண்ணை விரும்பியதால் பிரச்சினை காதல் தகராறில் மோதல்; 3 பேர் கைது
x

புதுவண்ணாரப்பேட்டையில் ஒரே பெண்ணை விரும்பியதால் ஏற்பட்ட பிரச்சினையில் மோதலில் ஈடுப்பட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் 17 வயது சிறுவன் மற்றும் கதிர் (19), யுவராஜ் (22) ஆகிய3 பேரும் கூடுவாஞ்சேரியில் அறை எடுத்து தங்கி வயர் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.

அப்போது இவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் வசிக்கும் 20 வயதுடைய பெண்ணை 17 வயது சிறுவன் மற்றும் அவரது நண்பர் கதிர், யுவராஜ் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த யுவராஜ் தனது நண்பர்களான கதிருடன் சேர்ந்து சென்னை புதுவண்ணாரப்பேடையில் உள்ள சிறுவனின் வீட்டுக்கு சென்று சராசரியாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தன்னை தானே கத்தியால் சிறியதாக வெட்டிக்கொண்டு, கதிர் மற்றும் யுவராஜ் வெட்டியதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், 17 வயது சிறுவன் ஏமாற்றி பொய் புகார் கூறியதையடுத்து, சிறுவன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், யுவராஜ் மற்றும் கதிரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story