குடும்பத்தகராறில் மோதல்; 2 பேருக்கு அரிவாள் வெட்டு


குடும்பத்தகராறில் மோதல்; 2 பேருக்கு அரிவாள் வெட்டு
x

குடும்பத்தகராறில் ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருச்சி

திருச்சி உறையூரை சேர்ந்தவர் அன்பானந்தம் (வயது 32). இவர் லாவண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு அன்பானந்தம் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்திருப்பது லாவண்யாவுக்கு தெரியவந்துள்ளது. இதுபற்றி அவர் தனது சகோதரர்களான ராஜேஷ், பூவரசு ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ராஜேஷ், பூவரசு, பூவரசுவின் மனைவி பாரதி ஆகியோர் லாவண்யாவை அழைத்துக்கொண்டு அன்பானந்தம் வீட்டுக்கு சென்று, லாவண்யா பெயரில் வீட்டை எழுதி கொடுக்கும்படி மிரட்டியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் அன்பானந்தம், ராஜேஷ் ஆகியோர் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த இருவரும் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுகுறித்து அவர்கள் கொடுத்த புகாரின்பேரில் உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story