உலகக்கோப்பை வென்ற மெஸ்சிக்கு வாழ்த்துக்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


உலகக்கோப்பை வென்ற மெஸ்சிக்கு வாழ்த்துக்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 18 Dec 2022 8:22 PM GMT (Updated: 18 Dec 2022 8:34 PM GMT)

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

32 நாடுகள் பங்கேற்ற 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அரபு நாடான கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இதில் உலகக் கோப்பை மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பிரான்சும், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இன்று இரவு மோதின.

இந்த போட்டியில் 90 நிமிடங்கள் ஆட்டநேர முடிவில் பிரான்ஸ் - அர்ஜென்டினா அணிகள் 2-2 என்ற கோல் கணக்கில் சமனில் இருந்ததால் கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கூடுதல் நேரம் முடிவிலும் ஆட்டம் 3-3 என்ற கோல் கணக்கில் சமனில் நீடித்ததால் பெனால்டி ஷூட் அவுட் வழங்கப்பட்டது.

பின்னர் பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி அர்ஜென்டினா உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. இந்த நிலையில் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா அணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "உறுதியாக மிகவும் சிறப்புடைய ஒரு போட்டி. பிரான்சு அணியின் ஒருபோதும் விடாத மனப்பான்மை மற்றும் எம்பாப்பேவின் ஹாட்ரிக் கோல் இந்த போட்டியை உலகக் கோப்பையின் சிறந்த இறுதிப் போட்டிகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினா மற்றும் G.O.A.T மெஸ்சிக்கு வாழ்த்துக்கள். மார்டினசுக்குச் சிறப்புப் பாராட்டுச் சொல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார்.



Next Story