7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள மாணவி கிருத்திகாவிற்கு எனது வாழ்த்துக்கள் - எடப்பாடி பழனிசாமி
அம்மா அரசு கொண்டு வந்த 7.5 சதவீதம் உள் இட ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ள மாணவி கிருத்திகாவிற்கு எனது வாழ்த்துக்கள் என ஈபிஎஸ் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,
2023 - 2024 இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்புகளில் சேருவதற்குத் தகுதி பெற்ற மாணவ மாணவிகளின் தரவரிசை பட்டியலில், அம்மா அரசு கொண்டு வந்த அரசுப்பள்ளி மாணவர் 7.5சதவீதம் உள் இட ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் 569 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ள சேலம் மாணவி கிருத்திகாவிற்கு எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதுடன்
இளநிலை மருத்துவக் கல்வியை தொடங்கவிருக்கும் வருங்கால மருத்துவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Related Tags :
Next Story