தேசிய கட்சியாக அங்கீகாரம் பெறும் ஆம் ஆத்மி - மக்கள் நீதி மய்யம் வாழ்த்து


தேசிய கட்சியாக அங்கீகாரம் பெறும் ஆம் ஆத்மி - மக்கள் நீதி மய்யம் வாழ்த்து
x

குஜராத் தேர்தல் முடிவுகளால் தேசிய கட்சியாக அங்கீகாரம் பெறும் ஆம் ஆத்மிக்கு மக்கள் நீதி மய்யம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் 5 தொகுதிகளை கைப்பற்றி அம்மாநில மக்களின் ஆதரவை பெற்றுள்ளது, ஆம் ஆத்மி கட்சி. டெல்லி, பஞ்சாப், கோவா மாநிலங்களை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் ஆம் ஆத்மி தடம் பதித்துள்ளது. உண்மையிலேயே மிகுந்த வரவேற்புக்கு உரியது.

குஜராத் தேர்தல் முடிவுகளால் தேசிய கட்சியாக அங்கீகாரம் பெறும் ஆம் ஆத்மிக்கும், அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மக்கள் நீதி மய்யம் மனமார்ந்த பாராட்டை தெரிவித்து கொள்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story