குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்து


குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்து
x
தினத்தந்தி 25 Jun 2023 8:04 PM GMT (Updated: 26 Jun 2023 10:28 AM GMT)

குத்துச்சண்டை போட்டியில்வெற்றி பெற்ற வீரர்கள் அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

சேலம்

தேசிய குத்துச்சண்டை சம்மேளனத்தின் கீழ் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில ஜூனியர் மற்றும் இளையோர் தேர்வு குத்துச்சண்டை சென்னை ஐ.சி.எப். மைதானத்தில் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டம் சார்பில் 75-80 கிலோ எடைப்பிரிவில் ஸ்ரீசுதர்சன் வெள்ளிப்பதக்கம் பெற்றார். 63.5- 67 கிலோ எடை பிரிவில் ஹிதேஷ், 54-57 கிலோ எடை பிரிவில் சஞ்சய் ஆகியோர் வெண்கல பதக்கம் பெற்றனர். இதேபோல் ஜூனியர் பிரிவில் 66- 70 கிலோ எடை பிரிவில் மதுமித்திரன் வெண்கல பதக்கம் பெற்றார்.

இதையடுத்து வெற்றி பெற்ற வீரர்கள் அஸ்தம்பட்டி போலீஸ் உதவி கமிஷனர் லட்சுமி பிரியாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட குத்துச்சண்டை விளையாட்டு சங்க செயலாளர் பிரேம்குமார், துணைச்செயலாளர்கள் ஜூபிட் விவேக், ஆத்தூர் ஆதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story