காங்கிரஸ் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
சிங்கம்புணரி தாலுகாவுக்கு உட்பட்ட எஸ்.புதூர் ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாக்குச்சாவடி பூத் கமிட்டி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிங்கம்புணரி
சிங்கம்புணரி தாலுகாவுக்கு உட்பட்ட எஸ்.புதூர் ஒன்றியத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வாக்குச்சாவடி பூத் கமிட்டி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம அருணகிரி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், இலக்கிய அணி சிங்கைதருமன், சிங்கம்புணரி நகர தலைவர் தாயுமானவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேர்தல் வாக்குச்சாவடி பூத் கமிட்டி தொடர்பான ஆலோசனை கூட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள கட்டுக்குடிபட்டி, நெடுவயல், கீழவயல், கரிசல்பட்டி, தர்மபட்டி, புழுதிபட்டி ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது. இதில் தவசீலன், லோகநாதன் ரமணி, தியாகராஜன், ராமநாதன், சுந்தரம், ராஜு, சையது முகமது, மற்றும் மகளிர் அணியினர், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், உறுப்பினர்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.