காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்


காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
x

மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து மாவட்டம் முழுவதும் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டை

பா.ஜ.க. ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் தொடர் கலவரம் காரணமாக ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. வன்முறையை தடுக்க தவறிய மத்திய மற்றும் மணிப்பூர் மாநில பா.ஜ.க. அரசைக் கண்டித்தும், மணிப்பூரில் அமைதி நிலவ வேண்டியும், பாளையங்கோட்டை மகராஜநகரில் உள்ள நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் அலுவலகம் முன்பு காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் அழகியநம்பி தலைமை தாங்கினார். இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அழகியபாண்டியபுரம்

மானூர் அருகே அழகியபாண்டியபுரம் மெயின் பஜாரில் வடக்கு வட்டார தலைவர் கணேஷ் தலைமையில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வட்டார தலைவர்கள் அலெக்ஸ், காமராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் சொர்ணம், மாவட்ட துணைத்தலைவர் சிவன்பெருமாள், மகளிரணி தலைவி ஸ்டெல்லா மேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாங்குநேரி-மூலைக்கரைப்பட்டி

நாங்குநேரியில் மாவட்ட பொருளாளர் பால்ராஜ் தலைமையில் காங்கிரசார் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.வி.கிருஷ்ணன், நகர காங்கிரஸ் தலைவர் பி.சுடலைகண்ணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மணிப்பூர் கலவரத்தைக் கண்டித்து, மூலைக்கரைப்பட்டி பஸ் நிலையம் அருகில் ம.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பி.குமார் தலைமையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் பார்வதி மோகன், மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் லெனின் பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகன், ஒன்றியக்குழு உறுப்பினர் கணேசன், ம.தி.மு.க. நாங்குநேரி மேற்கு ஒன்றிய செயலாளர் பேச்சிமுத்து, மக்கள் நீதி மய்யம் நகர செயலாளர் செல்வகுமார், திராவிடர் கழகம் மதியழகன், சமூக ஆர்வலர் சாகுல் ஹமீது, ம.தி.மு.க. நகர செயலாளர் துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story