அரிவாள் வெட்டில் காயம் அடைந்த மாணவர்-தங்கைக்கு காங்கிரசார் நிதி உதவி
நாங்குநேரியில் அரிவாள் வெட்டில் காயம் அடைந்த மாணவர்-தங்கைக்கு காங்கிரசார் நிதி உதவி வழங்கினர்.
திருநெல்வேலி
நாங்குநேரியில் அரிவாளால் வெட்டப்பட்ட பிளஸ்-2 மாணவர் சின்னத்துரை மற்றும் அவருடைய தங்கை சந்திரா செல்வி ஆகியோர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் பட்டியல் அணி தலைவர் ரஞ்சன்குமார், மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னத்தம்பி ஆகியோர் நேற்று அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று, அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அண்ணன், தங்கை மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்கள். மேலும் ரூ.50 ஆயிரம் நிதியுதவியை ரஞ்சன்குமார் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story