காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாளை உதகை வருகிறார்
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் ராகுல்காந்தி, உதகை செல்கிறார்.
உதகை,
சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு காரணமாக மீண்டும் எம்பி பதவியை பெற்ற ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் ஆவேசமாக மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசினார்.
இந்த நிலையில் நாளை ராகுல் காந்தி தமிழகத்தில் உள்ள உதகமண்டலத்திற்கு வர இருக்கிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வரும் ராகுல் காந்தி, அதன்பின் கார் மூலம் உதகமண்டலம் செல்கிறார்.
உதகையில் தன்னார்வ அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர் அவர் அங்கிருந்து தனது சொந்த தொகுதியான வயநாடு செல்வதாக காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story