காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை
மானாமதுரை
மானாமதுரையில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மானாமதுரை நகர் காங்கிரஸ் தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். முன்னாள் மத்திய இணை அமைச்சர் சுதர்சன் நாச்சியப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், மாவட்ட துணை தலைவர் காசிராஜன், வட்டார தலைவர்கள் ஆரோக்கியதாஸ், கரு.கணேசன், சட்டமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் சோனைராஜ், நிர்வாகிகள் திருப்புவனம் கதிரேசன், இளையான்குடி மலைச்சாமி, தேவகோட்டை லோகநாதன், எஸ்.சி., எஸ்.டி. நகர் தலைவர் பழனிவேல் ராஜன் உள்பட 200-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story