75-வது சுதந்திர தின விழாவையொட்டி காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம்
75-வது சுதந்திர தின விழாவையொட்டி காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனா்.
பெண்ணாடம்,
நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவையொட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் நடைபயணம் நிகழ்ச்சியை தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில், சுதந்திர தின பவள விழாவை முன்னிட்டு நடைபயண யாத்திரையை பெண்ணாடம் அடுத்த வெண்கரும்பூர் ஊராட்சியில் விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ. ராதா கிருஷ்ணன் தலைமையில் அக்கட்சியினர் தொடங்கினர். இந்த நடை பயணமானது வெண்கரும்பூர் கிராமத்தில் தொடங்கி, பெண்ணாடம் வழியாக திட்டக்குடி வரை சென்றது. இதில் 75-வது சுதந்திர தின பவள விழாவை வரவேற்று கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ராஜன், மாநில செயலர் அன்பரசு, மாநில மகளிரணி கவிதா, மாவட்ட தலைவர் ஹேமலதா, நல்லூர் வட்டார தலைவர் சக்திவேல்ராஜன், பெண்ணாடம் நகர தலைவர் கந்தசாமி மற்றும் ஊடக பிரிவு காஜாமுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.